Posts

Showing posts from October, 2025

🕉️ இறைவனை ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவும் ஒரு இறை அனுபவப் பதிவு 🕉️

  🌺 இறைவனை ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவும் ஒரு இறை அனுபவப் பதிவு சிவாய நம சாய்ராம் அன்பின் உருவமான குருவின் திருவடிகளை வணங்கி, இந்தப் பதிவை இறைவனின் அன்பை உணர்ந்து கொள்ள உதவும் பதிவாக இங்கு உணர்வுகள் எழுத்துக்களாக அவர் அருளாலேயே வார்த்தைகளாக வடிக்கப்பட்டிருக்கிறது. கருணாமூர்த்தியான இறைவனின் தாமரைப் பாதங்களை வணங்கி இந்தப் பதிவை தொடர்ந்து படிப்போம்! உணர்வில் இறைவனை உணர்வோம்! 🕊️ இறைவனின்  முன்கூட்டிய செயல் இறைவன் ஒருவருக்கு கருணை புரிய எத்தனை விஷயங்களை முன்கூட்டி செய்கிறான் என்பதை இந்தப் பதிவு ஆழமாக உணர்த்துகிறது. நம்முடைய அறக்கட்டளை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக ஜகத்குரு ஐயா அவர்களின் சித்த மருத்துவர் குழுவில் இணைந்து பல்வேறு விஷயங்களை ஆழ்ந்து கவனித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு இணைந்ததன் மூலம் மனித நேயம் மிக்க கிஷோர் அவர்களின் அறிமுகமும் கிடைத்தது . தன்னால் முடிந்தவரை அடுத்த மனிதருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளத்தை மட்டும் தான் கிஷோர் மற்றும் அவருடைய மனைவி பூரணியிடம் பார்க்க முடியும். 🌧️ வெள்ளம் – புதிய வீடு – இறை அருள் தொடக்கம் டிசம்பர் 2024ல் ஒரு...

குருவின் அருளினால் — கந்த குரு கவசத்தின் எளிமையான விளக்கம் 3

  பாடல் வரிகள்: அமரத் தன்மையினை அனுக்ரகித் திடுவாயே வேலுடைக் குமரா; நீ வித்தையும் தந்தருள்வாய் வேல்கொண்டு வந்திடுவாய்; காலனை விரட்டிடவே தேவரைக் காத்த திருச்செந்திலாண்டவனே; திருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதியான கந்தா; பரஞ்ஜோதியுங் காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்; திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய்; செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய்;   அமரத் தன்மையினை அனுக்ரகித் திடுவாயே இங்கு “அமரத் தன்மை” என்றால் பிறப்பு – இறப்பு இல்லாத நிலை , அதாவது மோட்சம்! இறப்பு இல்லாத நிலை என்றால் உடல் அழியாது எனப் பொருள் அல்ல. இந்த உடல் மண்ணில் புதையவோ, தீயில் கலந்து போகவோ செய்யவேண்டும் — அது இயற்கையின் நீதி. ஆனால் அந்த உடலுக்குள் உள்ள ஆன்மா — அது மரிக்காது. அது அதன் கர்ம வினைகள் (செயல்கள், எண்ணங்கள்) படி அடுத்த பயணத்தைத் தொடங்கும். 🔹 மரணத்தின் போது நடக்கும் உண்மை நிலை உடலை விட்டு ஆன்மா நீங்கும் பொழுது, அது புண்ணியமும் பாவமும் சேர்ந்த வினைப் பலனை ஏந்திக்கொண்டு செல்கிறது. அப்போது காலன் (எமதர்மராஜா) மற்றும் அவரது தூதர்கள் ஆன்மாவைப் பற்றி எடுத்துச் செல்கின்றனர். அது எளி...

குருவின் அருளினால் — கந்த குரு கவசத்தின் எளிமையான விளக்கம் 2

பாடல் வரிகள்: அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறள் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா சண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி போற்றி போற்றி முருகா போற்றி, அறுமுகா போற்றி; அருட்பதம் அருள்வாய் தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய். ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய் சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம் திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ஆறுமுக ஸ்வாமி யுன்னை அருட்ஜோதியாய்க் காண அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய். “அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே” இது குருவை “அன்பின் உருவம்” என்று போற்றி ஆரம்பிக்கிறது. இன்று உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான அடியவர்கள்  எத்தனையோ மகான்களை குருவாக வணங்குகின்றனர். ஆனால் அவரை அன்பின் உருவமாக உணர்பவர்கள் தான் பிறவா பெருநிலையை (மோட்ச நிலையை) அடையும் தகுதியை பெற்றவர்கள். ஏனெனில் குரு — வெறும் ஆசிரியர் அல்ல, அன்பு என்ற ஜோதி வடிவில் நம்முள்...

குருவின் அருளினால் — கந்த குரு கவசத்தின் எளிமையான விளக்கம் 1

  🌺 சிவாய நம சாய்ராம் 🌺 குருவின் அருளினால் — கந்த குரு கவசத்தின் எளிமையான விளக்கம் பாடல் வரிகள்: கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே. விளக்கம்: கந்த குரு கவசம் என்பது மாயை என்னும் இருள் நீக்கி, ஞானம் எனும் ஒளியை வழங்கக்கூடிய ஒரு அற்புதமான கவசம். இந்தப் பாடலில் முதலில் விநாயகரை வணங்குகிறோம் — ஏனெனில் எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கும்போது முதலில் விநாயகர் அருளே அவசியம். “கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே” கலியுகத்தில் தெய்வமாக விளங்கும் விநாயகர், முருகனுக்கு மூத்த சகோதரர். அவர் மூஷிகம் எனும் எலியை வாகனமாகக் கொண்டவர். அவர் மூலப் பொருளாக — அனைத்திற்கும் ஆதாரமாக — விளங்குகிறார். “ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே” இந்தக் கவசம் பாடப்படும் போது கலியுகத்தின் தோஷங்கள் நீங்கட்டும் என்று வேண்டுகிறோம். ...

🕉️ சிவபுராணத்தின் வாழ்க, வெல்க, போற்றி குறித்து குரு அருளால் எளிய விளக்கம்!

  🕉️ சிவபுராணத்தின் வாழ்க வெல்க போற்றி – குரு அருளால் எளிய விளக்கம் சிவாய நம 🌿 திருவாசகத்தின் தன்மை ஒருமை சிறப்பு திருவாசகத்தின் மிக முக்கிய சிறப்பு என்னவென்றால் — திருவாசகம் முழுவதும் தன்மை ஒருமையில் (First Person Singular)  எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, திருவாசகம் முழுவதும் மாணிக்கவாசகப் பெருமானால் உருகி உருகி பாடப்பட்டிருந்தாலும், திருவாசகத்தை யார் படித்தாலும்  படிப்பவர் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, திருவாசகத்தை  யார் உணர்ந்து படித்தாலும் படிக்கும் ஒவ்வொருவரும் உள்ளம் உருகி பாடுவதாக அமையும். அதனால் தான் இதனை — “ திருவாசகத்திற்கு உருகாதார், ஒரு வாசகத்திற்கும் உருகாதார் ” என்று சொல்லியிருக்கிறார்கள். 🌸 வாழ்க, வெல்க, போற்றி – வார்த்தைகளின் ஆழமான பொருள் திருவாசகத்தின் முதல் 16 வரிகளில், மாணிக்கவாசகர் பெருமான் இறைவனின் திருவடிகளை பற்றியும் “வாழ்க, வெல்க, போற்றி” என்கின்ற வார்த்தைகளையும் மிக அழகாக உபயோகப்படுத்தியுள்ளார். “வாழ்க, வெல்க” என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் ஐம்பாலுக்கும் பொருந்தும் — அதாவது, ஆண...
  சிவாய நம, முழு முதல் கடவுளான விக்னங்களை தீர்க்கும் விநாயகரின் திருவடி வணங்கி, இம்மையில் குருவாக வந்து ஒரு நொடியும் பிரியாது இன்றைய உலகத்திற்கு தேவையான விஷயங்களுக்கு மட்டுமல்லாமல் மறுமை உலகத்திற்கு செல்லும் பொழுதும் வழிகாட்டக்கூடிய அந்தப் பிரகாசமான ஞான ஒளி ஆன ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான சாய்நாதரின் திருவடிகளை வணங்கி, அவர் அருளால் வெறும் எழுதுகோலாக இருக்கும்  இந்த நாயேன் குருவின் அன்பை உணர்ந்து, உள்ளம் உருகி அவருடைய தாமரை மலர்ப் பாதங்களை அன்புடன், நன்றியுடன், பணிந்து  வணங்கி, படிப்பவர் உள்ளத்தை உருக்கும் வண்ணம் திருவாசகத்தை பாடிய மாணிக்கவாசகப் பெருமான் திருவடிகளையும் வணங்கிப் பணிகிறேன். மாணிக்கவாசகப் பெருமான் எழுதிய வார்த்தைகளின் உட்பொருளை அவரே உணர்த்தி அதன்மூலம் அவர் உணர்ந்த உண்மைப் பொருளான இறைவனை உணர்த்த வேண்டும் என்ற ஆழ்ந்த ஏக்கத்துடன் கூடிய பணிவான கோரிக்கை அவருடைய திருவடியில் குருவின் அருளால்  வணக்கத்துடன் வைக்கப்படுகிறது.  சிவபுராணத்தின் ஆழமான வார்த்தைகளுக்கு உட்பொருள் உணர்ந்து, உண்மைப் பொருள் அறிய முழுமுதற் கடவுளான விநாயகரும், அன்பின் உருவமான குருவும், தா...

தான தர்மம் ஏன் செய்ய வேண்டும்?

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை அன்று – இப்பொழுதல்லாமல் பிறகு (anytime but present, i.e., not now) அறிவாம் – முடிவு செய்தல் என்னா – “இப்ப என்ன அதுக்கு அவசரம்?” என்கிற தொனி பொன்றுங்கால் – அழிதல் பொன்றாத் துணை – அழியாமல் வரும் துணை சிவாய நம குருவின் அருளால் உணர்ந்த விளக்கம்: பிறருக்கு உதவி, தர்மம் போன்றவற்றை நினைத்த அந்த நொடியிலேயே செய்து விட வேண்டும். “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று தள்ளி போடக்கூடாது. ஏனெனில் உடலை விட்டு ஆன்மா எப்பொழுது நீங்கும் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.  நம்மிடம் உள்ள மற்ற எல்லாம் நம்மை விட்டு நீங்கும் அல்லது அழிந்து விடும். ஆனால் நாம் செய்த தர்மம் நம்முடன் அழியாமல் துணையாக வரும் — என்பதுதான் பொருள்.  தான தர்மம் ஏன்  செய்ய வேண்டும்? நாம் இறந்த பிறகு, நம்ம உடலை விட்டு ஆன்மா வெளியேறியே ஆகணும். அப்போ அந்த ஆன்மா எங்கே போகும்? என்ன செய்யும்? — இதுதான் கேள்வி. ஆன்மாவுக்கு பசியும் தாகமும் இருக்கு. ஆனா அதுக்கு சாப்பாடு எப்படி கிடைக்கும்? எங்கே ஓய்வெடுக்கப் போகும்? இதுக்காகத்தான் நாம இப்போ இருக்கு...