நீலங்கொள் மேகத்தின் - 1296வது திருப்புகழ் பாடலின் இறையருளால் உணர்ந்த விளக்கம்!
சிவாய நம ஓம் சாய் ராம், சீரடி சாய் உருவத்தில் குருவாக வந்து ஆட்கொண்ட இறைவனின் திருவடியை ஆத்மார்த்தமாக வணங்கி இந்தப் பதிவு பதிவிடப்படுகிறது. இறையருளால் தன் உள்ளத்தில் இறைவனை உணர்ந்த அருணகிரிநாதப் பெருமான் திருவடிகளையும் ஆத்மார்த்தமாக வணங்கி இந்தப் பாடலின் விளக்கம் இறையருளால் கொடுக்கப்பட்டிருக்கிறது. கார்த்திகை தீபம் என்றால் சிவசக்தி ஸ்வரூபமான முருகன், அர்த்தநாரீஸ்வரர் அதாவது தன்னில் சக்தியை இணைத்து உருவம் மறைந்து தீபமாக காட்சி தரும் பரம்பொருளான இறைவன் மனதில் தீபமாக தோன்ற வேண்டும். மனம் சமநிலையில் இருந்து செயல்படும்பொழுது தீபச்சுடராய் மறைந்திருக்கும் இறைவன் உள்ளத்தில் வெளிப்படுவான். இதனை உணர மட்டுமே முடியும்! வரும் கார்த்திகை திருநாளில் உள்ளமெனும் கோவிலில் நான் என்ற கர்வத்தை நீக்கி நம் அறியாமை இருளை நீக்கும் விதமாக இறைவனை உணர ஆத்மார்த்தமாய் பிரார்த்தனை செய்வோம். சிவாய நம ஓம் சாய் ராம், நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண்டதனாலே மால்கொண்ட ப...