சிரவண பக்தி - நவ வித பக்திகளில் முதன்மையானது

 


கேட்டல் திறன் என்பது  அடிப்படைத் திறன்களில் ஒன்று, இதில் ஒருவர் மற்றவர்கள் பேசுவதைக் கவனித்து, புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவதை உள்ளடக்கியது.கேட்டல் என்பது இயற்கையான உடல் திறன், ஆனால் அதைவிடச் செவிமடுத்தல் என்பது ஒரு செயல் திறன் என்று அழைக்கப்படுகிறது, இதில் புரிந்துகொள்ளும் திறன் அடங்கியுள்ளது


அலட்சியம், பிறரை மதிக்காத மனோபாவம், அல்லது தவறான புரிதல்  — அது கர்மா பலவீனமாகவோ சமநிலையற்றதாகவோ இருப்பதைக் குறிக்கும் ஒரு அடையாளமாகக் கொள்ளலாம்.


அலட்சியம்


கவனம் சிதறி, மனதளவில் நிகழ்காலத்திலிருந்து விலகி இருப்பது, ஒவ்வொரு தருணமும் தரும் பாடங்களைப் பூரணமாக ஏற்காததைக் காட்டுகிறது. இதனால் ஆன்மிக வளர்ச்சி தாமதமாகும்.


புறக்கணித்தல்


பிறரின் சொற்களையும் உணர்வுகளையும் பொருட்படுத்தாமல் இருப்பது, கருணை குறைவைக் காட்டுகிறது. இது பெருமை, சுயநலம் அல்லது பொறுமையின்மை போன்ற தீராத கர்ம விதிகளை பிரதிபலிக்கிறது; இவை நல்ல ஆற்றல் ஓட்டத்தைத் தடுக்கின்றன.


தவறான புரிதல்


பிறர் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியாமை, உள் பாகுபாடுகள் அல்லது தீரப்படாத மனக்கசப்புகளில் இருந்து உருவாகிறது. இது மனதிலும் உணர்ச்சியிலும் உள்ள சமநிலையின்மையைச் சுட்டிக்காட்டுகிறது; இதனால் கர்மத் தீர்வு மற்றும் ஆழ்ந்த ஞானம் தடுக்கப்படலாம்.


ஒருவர் கேட்க விரும்பாமல் இருந்தால், பிறரின் ஞானத்தையும் வழிகாட்டுதலையும் பெறும் திறனை தடுத்துக்கொள்கிறார்கள். இது  ஆக்ஞா,விசுத்தி சக்ரங்களில் தடையைக் உருவாக்குகிறது.


கர்ம வாய்ப்புகளை இழத்தல்: ஒவ்வொரு தொடர்பும் பொறுமை, கருணை, புரிதல் போன்ற நல்லொழுக்கங்களைப் பயிற்சி செய்யும் ஒரு வாய்ப்பு. சரியாகக் கேளாமல் இருப்பது இந்த வாய்ப்புகளை இழப்பதற்குக் காரணமாகி, கடினமான வாழ்க்கைச் சவால்களைத் தொடரச் செய்யலாம்.


பலவீனமான கேட்கும் திறன் உறவுகளில் தவறான புரிதல்கள், உள்ளார்ந்த ஏமாற்றம் போன்றவற்றை உருவாக்கும்; இது எதிர்மறையான கர்ம முறைகளை தொடர்ந்து வலுப்படுத்தி கொண்டே இருக்கும். 


பிறரை கவனமாகக் கேட்பது, புரிந்துணர்வு மூலம் நம்  சொந்த பழக்கங்களையும் மனவடிவங்களையும் அறிய உதவுவதால், கர்மத் தடைகளை அகற்றும் முக்கியமான வழியாகும். உண்மையாகக் கேட்பதன் மூலம் நாம்  நம்மையும்  பிறரையும் மன்னிக்கும் திறனைப் பயிற்சி செய்கிறோம்  — இவை அனைத்தும் கர்மச் சுழற்சிகளைத் தெளிவுபடுத்தப் பயனுள்ளவை.


சூழ்நிலைகளை பிறரின் பார்வையில் இருந்து பார்க்கும் திறன் அதிகமான பாசத்தையும் கருணையையும் உருவாக்கும் — அவர்களுக்காகவும் நமக்காகவும்.


சிரவண பக்தி 


நமக்கு பார்க்க பிடிக்காத விஷயங்களை கண்ணை மூடிக்கொண்டு தவிர்க்கலாம்.

பேச பிடிக்கவில்லை என்றால், வாயை மூடிக் கொள்ளலாம்.

ஆனால் நல்ல விஷயங்களை எப்போதுமே கேட்கவேண்டும் என்பதற்க்காக தான் காது திறந்தே இருக்கிறது.

நடந்து கொண்டே இருந்தால், கால் வலிக்கும்.

பார்த்துக் கொண்டே இருந்தால் கண் வலிக்கும்.

பேசிக்கொண்டே இருந்தால் வாய் வலிக்கும்.

எழுதிக் கொன்டே இருந்தால் கை வலிக்கும்.

ஆனால் கேட்டுக்கொண்டே இருந்தால் காது வலிக்காது.

அதனால் எப்பொழுதும் நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்..


ஸ்ரவண வழியின் சிறந்த உதராணம் பரிட்சித் மஹாராஜாவை சொல்வர். ஏழு நாளில் தன் சாவு நிச்சயம் என்று தெரிந்து,  மகாராஜா ஸ்ரீமத் பாகவத கதைகளை  ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி சொல்லக் கேட்டு முக்தி அடைந்தார் .

ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில்,அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது, கிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கூறும் பாகவதம் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகப்பிரம்மர், அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார்.

பரீஷத்து ராஜாவும், பக்தி சிரத்தையுடன் அதைக் கேட்டார்.

சாபத்தின்படியே பாம்பரசன் தட்சகன் பரிட்சித்தை ஏழாம் நாளில் கடிக்க,

மோட்சம் அடைந்தார் -


ஸ்ரீராமரோடு வைகுந்தம் செல்ல விருப்பமின்றி ஹனுமான் ஸ்ரவண பக்திக்காக சிரஞ்சீவியாக பூலோகத்திலே தங்கி விட்டார். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ராமநாமம் சொல்பவரை ஆசிர்வதிக்க வந்து விடுகிறார். எனவே எளிதான ஸ்ரவண பக்தியை மேற்கொண்டு எல்லோருமே முக்தியை அடையலாம் என ஆன்றோர்கள் கூறியுள்ளார்கள்.


கேட்டல் மட்டும் முக்தி கிடைத்து விடாது -- நான்கு நல்ல வார்த்தைகள் பேசினாலே முக்தி என்று திருமூலர் கூறியிருக்கிறார் ... 


யாவர்க்குமாம் இறைவற்கு

ஒரு பச்சிலை;

யாவர்க்குமாம் பசுவுக்கு

ஒரு வாயுறை;

யாவர்க்குமாம் உண்ணும்போது

ஒரு கைப்பிடி;

யாவர்க்குமாம் பிறர்க்கு

இன்னுரை தானே.


இறைவனை ஒரு பச்சிலை கொண்டு பூஜை செய்யுங்கள்... பசுவிற்கு ஒரு வாயளவு புல், உணவு கொடுங்கள்... சாப்பிடும் போது, ஒரே ஒரு கைப்பிடி எடுத்து வறியவர்க்கு சாப்பிடக் கொடுங்கள்... பிறரிடம் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்... இது எல்லோரும் செய்யக்கூடிய மிக எளிய வழிபாடு என்கிறார் திருமூலர்...


பசுவிற்கு புல் தர வேண்டும் என்பதை "கோ க்ராஸம்' என வேதம் வலியுறுத்துகிறது.இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு "கோ க்ராஸ்" (cow grass) என்று பேர் வந்ததோ என்னவோ?


 தமிழாக்கம் ரஞ்சனி USA

Comments

Popular posts from this blog

சீரடி சாய்நாதர் அருளால் உணர்த்தப்பட்ட எளிய சிவபுராண விளக்கம்!

🕉️ இறைவனை ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவும் ஒரு இறை அனுபவப் பதிவு 🕉️

🕉️ சிவபுராணத்தின் வாழ்க, வெல்க, போற்றி குறித்து குரு அருளால் எளிய விளக்கம்!