"தாய்" மகாகுரு பஞ்சகவ்யம் செய்யும் முறை!
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
மகாகுரு பஞ்சகவ்யம்
~~~~~~~
பசுமைப் புரட்சிக்காக மாபெரும் ஆற்றல் வாய்ந்த மகாகுரு பஞ்சகவ்யம் செய்யும் முறையினை விளக்குகிறார் தயவு திரு ஜகத்குரு ஐயா அவர்கள்.
<><><><>
மகா குரு பஞ்சகவ்யம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
1. நாட்டு மாட்டு சாணம் 10 கிலோ
2. நாட்டு மாட்டு நெய் 1 லிட்டர்
3. நாட்டு சர்க்கரை 1 கிலோ
4. தயிர் 6 லிட்டர்
5. பால் 6 லிட்டர்
(மூன்று மணி நேரத்திற்குள் சேகரிக்கப்பட்ட புத்தம் புதிய பால்)
6. கோமியம் 10 லிட்டர்
7. 5 கிலோ கற்றாழைக்கு கற்பூரவள்ளி இலை 21/2 கிலோ விழுதாக அரைத்த கலவை
8. வாழைப்பழம் 2 டஜன்
9. புளிச்சைக் கீரையின் இலைச்சாறு - 4 லிட்டர்
(சிகப்பு (அ) பச்சை)
இப்போது மகாகுரு பஞ்சகவ்யம் உருவாக்கும் முறையை அறிந்து கொள்வோம்:
முதல் நாள்:
_________
நாட்டு மாட்டு சாணம் - 10 கிலோ
நாட்டு சர்க்கரை - 1 கிலோ
அரைத்து பிழிந்து எடுத்த புளிச்சைக் கீரை சாறு - 4 லிட்டர்
இதனுடன் 1- லிட்டர் நாட்டு மாட்டு நெய்
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மூன்று நாட்களும் அந்த கலவையை நன்கு கலக்கி கலக்கி வைக்க வேண்டும்.
*இப்படி செய்வதால் சாண கலவையில் நன்கு நொதித்தல் (fermentation) ஏற்படும்
முதல் நாளில்
5 கிலோ அளவு சோற்றுக்கற்றாழையை வாங்கி கற்றாழை மடல்களின் விளிம்புகளில் இருக்கும் முட்களை மட்டும் லேசாக சீவி எடுத்துவிட்டு அதன் மற்ற பகுதிகளை வீணாக்காமல் அப்படியே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். இந்த கற்றாழை கூழை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
💥கற்பூரவள்ளி இலையை நன்கு அரைத்து இரண்டரை கிலோ அளவு எடுத்துக் கொள்ளவும்.
கற்றாழை கூழ் மற்றும் கற்பூரவள்ளி இலையை அரைத்த விழுதையும்
நன்கு கலந்து வைத்து விடவேண்டும
நான்காவது நாள்....*
_________
மேற்கூறியவாறு தயாரித்து வைத்திருக்கும் சாண கலவையுடன்...
மூன்று மணி நேரத்திற்குள் சேகரிக்கப்பட்ட புத்தம் புதிய பால்...
6 - லிட்டர்
6 - லிட்டர் தயிர்
கோமியம் - 10 லிட்டர்
2 டஜன் நன்கு கனிந்த வாழைப்பழத்தை தோலோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கூழாக்கியது
அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
பிறகு....
கற்றாழை கற்பூரவள்ளி விழுது சேர்ந்து ஜெயநீர் வந்த கலவையை மொத்தமாக அப்படியே கலக்கி மகாகுரு பஞ்சகவ்வியத்துடன் கலந்து விட வேண்டும்.
இந்த மகாகுரு பஞ்சகவ்யம் கலவையை அப்படியே 21 நாட்களுக்கு வைத்து விட வேண்டும்.
மகாகுரு பஞ்சகவ்வியம் செய்வதற்கு உலோக பாத்திரம் பயன்படுத்தக் கூடாது. மாற்றாக பிளாஸ்டிக் டப்பாவை (plastic drum) பயன்படுத்தவும்.
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து பிளாஸ்டிக் ட்ரம்மின் வாய்ப்பகுதியை ஒரு காட்டன் துணியால் மூடி வைக்க வேண்டும். பிளாஸ்டிக் மூடியை பயன்படுத்தக் கூடாது.
தினசரி இரண்டு வேளை ஒரு மூங்கில் குச்சியை கொண்டு நன்கு கலக்கி விட வேண்டும். இவ்வாறு கலக்கி விட பயன்படுத்திய மூங்கில் குச்சியை சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.
மேற்கண்ட கரைசலை தினமும் இருவேளை 60 முறை வலப்புறம் மட்டுமே கலக்க வேண்டும். இடப்புறமாக கலக்கக்கூடாது.
21 நாட்களுக்குப் பிறகு இந்த மகாகுரு பஞ்சகவ்விய கரைசல் முழுமையாக தயாராகிவிடும்
மகாகுரு பஞ்சகவ்வியத்தை உபயோகப்படுத்தும் முறை:
_________
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி மகாகுரு பஞ்சகவ்யம் என்ற அளவில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கும் போது பயிர்கள் பூச்சிகளினால் எந்த வித பாதகமும் இல்லாமல் பசுமையாகவும் செழிப்பாகவும் அதிகமான அளவு விளைச்சலையும் தரக்கூடிய ஆற்றல் வாய்ந்ததாகவும் செயல்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.
><><><><>
💥அபரிமிதமான விளைச்சலை தரக்கூடிய மகாகுரு பஞ்சகவ்யம் என்னும் இயற்கை உரத்தை வேளாண்மைக்கு பயன்படுத்தி விவசாயிகள் பெருமளவு லாபத்தை பார்க்கலாம்!
மண்ணின் வளத்தையும் காக்கலாம்!
எதிர்கால சமுதாயத்தையும் வளத்தோடு வரவேற்கலாம்!.
💥 ஒரு முக்கிய குறிப்பு:
அன்பர்களே! அக்காலத்தில் பொதுவாக மாடுகள் என்றாலே நாட்டு மாடுகள் தான் இருந்தது. ஆனால் இப்போதுள்ள காலத்தில் எல்லோரிடமும் நாட்டு மாடுகள் இருப்பதில்லை. அப்படி நாட்டு மாடு இல்லாத பட்சத்தில்... எவ்வகை மாடாக இருந்தாலும் சரி அதனுடைய சாணத்தையும், நெய்யையும் மகாகுரு பஞ்சகவ்வியத்திற்கு பயன்படுத்தலாம் இதில் எந்த வித தவறும் இல்லை. மேற்குறிப்பிட்டவாறு மகாகுரு பஞ்சகவ்யத்தை தயார் செய்தால் மட்டுமே போதும். நல்ல பலனை காணலாம்.
மகாகுரு பஞ்ச கவ்யம் தெளிக்கும் முறைகள்:
மகா குரு பஞ்சகாவியத்தை நாற்றுப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். நாற்று நடுவதற்கு முன்பு, மகாகுரு பஞ்சகாவ்யாவில் நாற்றுகளை நனைப்பதும், பின்னர் குறிப்பிட்ட இடைவெளிகளில் பயிர்களுக்குத் தெளிப்பதும் நல்லது.
பயன்கள்:
விதை மற்றும் நாற்று வளர்ச்சி:
மகாகுருபஞ்சகாவ்யாவில் விதைகளை ஊறவைப்பதால் அல்லது நாற்றுகளின் வேர்களை நனைப்பதால், விதை முளைப்புத்திறன் மற்றும் வேர் வளர்ச்சி மேம்படும்.
பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு:
பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
ஊட்டச்சத்து:
இது தாவரங்களுக்கு ஒரு முக்கிய சத்துப்பொருளாக செயல்பட்டு, வளர்ச்சிக்கு உதவுகிறது.
பயன்படுத்தும் முறை:
நாற்றுகளுக்கு:
நடவு செய்வதற்கு முன், நாற்று வேர்களை பஞ்சகாவ்யாவில் 30 நிமிடங்கள் நனைப்பது நல்லது.
தொடர் தெளிப்பு:
நாற்று நட்ட பிறகு, 15 நாட்களுக்கு ஒருமுறை மகாகுரு பஞ்சகாவ்யாவை இலைத்தெளிப்பாகத் தெளிக்கலாம். பயிரின் வளர்ச்சி நிலையைப் பொறுத்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தெளிப்பது நல்லது.
கரைசல் தயாரிப்பு:
பொதுவாக, 3% கரைசல் அதாவது 10 லிட்டர் தண்ணீருக்கு 300 ml மகாகுரு பஞ்சகாவ்யா கலந்து தெளிக்கப்படுகிறது.
நம்ம மாடி தோட்டத்துக்கு ஒரு லிட்டருக்கு 30 ml
மகாகுரு பஞ்சகாவியத்தை அனைத்து வகையான பயிர்கள், காய்கறிகள் மற்றும் மரங்களுக்குப் பயன்படுத்தலாம்,
ஆனால் சில செடிகளுக்கு அதன் அதிக அளவு அல்லது தவறான தெளிப்பு முறை தீங்கு விளைவிக்கலாம்.
குறிப்பிட்ட சில செடிகளின் நிலைக்கு ஏற்ப நீர்த்த கலவையை பயன்படுத்த வேண்டும்.
மகாகுரு பஞ்சகவ்யாவை தெளிக்கும் போது செடியின் இலைகள், வேர்கள் மற்றும் பூக்கும் நிலைகளில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.
மகாகுரு பஞ்சகாவியத்தைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
சரியான நேரம்
மகா குரு பஞ்சகவ்யாவை தெளிப்பதற்கு உகந்த நேரத்தை அறிந்து கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு எத்தனை முறை தெளிக்க வேண்டும், எந்த நேரத்தில் தெளிப்பது சிறந்தது என்பது பற்றி அறியலாம்.
பயன்படுத்தும் முறை
: இலைகள், வேர்கள், மற்றும் பூக்கும் நிலைகளில் உள்ள செடிகளுக்கு
மகா குரு பஞ்சகவ்யாவை தெளிக்கலாம்.
ஒவ்வொரு செடிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நீர்த்த கலவை போதுமானது.
தவிர்க்க வேண்டியவை : இந்த கரைசலில் பூச்சிக்கொல்லிகள் அல்லது ரசாயனங்கள் சேர்க்கக் கூடாது.
மேலதிக தகவலுக்கு:
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நீர்த்த கரைசலை நிரப்பி, மாதத்திற்கு ஒருமுறை அல்லது தோட்டத்தில் பூச்சிகளைக் கண்டால் உங்கள் செடிகளுக்குத் தெளிக்கவும்.
எனவே, மகாகுரு பஞ்சகவ்யா பயன்படுத்தும் முறை குறித்த முழுமையான விளக்கங்களைப் பார்த்து, சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
நன்றி🙏
இப்படிக்கு
ச. ஜகத்குரு
பசுமை புரட்சி
Comments
Post a Comment