இரண்டாம் கட்ட குரு பஞ்சகவியம் !" தாய்"மகா குரு பஞ்சகவ்யத்தை வைத்து குறைந்த செலவில் குரு பஞ்சகவியம் செய்யும் முறை!

 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!! வள்ளல் மலரடி வாழ்க!! வாழ்க!!

மகா குரு பஞ்சகவ்யத்தின் இரண்டாம் கட்ட பரிணாமம் -  இதற்கு அடிப்படை தேவை முறைப்படி தயாரித்த மகா குரு பஞ்சகவ்யம். 3 லிட்டர் மகா குரு பஞ்சகவ்யத்தை வைத்து மழை நீர் அல்லது அருவி நீர் கொண்டு இந்த மூன்று லிட்டரை 30 லிட்டர் பஞ்சகவ்யமாக எவ்வாறு மாற்றுவது என்பதை கீழே பார்க்கலாம்.   இவ்வாறு செய்யப்படும் பஞ்சகவ்வியமும்  ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.  அதே சமயம்  குறைந்த செலவில் இதனை தயாரித்து விடலாம்

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

சுத்தமான நீரை எப்படி குரு பஞ்சகவ்யமாக மாற்றுவது என்பதை பற்றி விளக்குகின்றார் நமது சித்த மருத்துவர் தயவு திரு ஜகத்குரு ஐயா அவர்கள். வாருங்கள் வாழ்வை வளமாக்க மண்ணின் வளத்தை காப்போம்!.

💥குரு பஞ்சகவ்யத்தின் இந்த இரண்டாம் கட்ட பரிணாமம் எப்படி மேம்படுத்தப்படுகின்றது என்றால்....

💥 முதல் முறை நாம் மகாகுரு பஞ்சகவ்யம் தயாரிக்கும் போது என்னென்ன பொருட்களை எல்லாம் பயன்படுத்தி மண்ணின் வளத்தை மேம்படுத்தினோமோ அதே போல் ஆற்றல் மிக்க  ஆனால் எளிய முறையிலான குருபஞ்சகவ்யமே இந்த குருபஞ்சகவ்யம் ஆகும்.


தேவையான பொருட்கள்:

------------------------------------

1.  குளோரின் கலக்காத தூய்மையான நீர்....

அ) மழைநீர் 

ஆ) அருவி நீர் 

இ) ஆழ் துளை கிணற்று நீர் (Borewell water) 

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று 30 லிட்டர்

2.  நாட்டு மாட்டு சாணம் 3 கிலோ 

3.  புளிச்சை கீரை சாறு 3 லிட்டர் (பச்சை (அ) சிகப்பு)

4.  நாட்டு சர்க்கரை 1/2 கிலோ 

5.   குரு பஞ்சகவ்யம் பயன்படுத்திய நிலத்தின் மண் ஒரு கைப்பிடி அளவு 

6.  முதல் கட்ட மகா குரு பஞ்சகவ்யம் -  3 லிட்டர் 

செய்முறை:

---------------------------

💥 மழை நீர், அருவி நீர், அல்லது குளோரின் கலக்காத ஆழ்துளை கிணற்று நீர் இவற்றில் ஏதேனும் ஒன்றை 30 லிட்டர் அளவு எடுத்துக் கொள்ளவும். 

💥 முதல் நாள் 3 கிலோ அளவு பசும் சாணத்தில்....

3  லிட்டர் புளிச்சைக் கீரை சாறு சிகப்பு  (அ) பச்சை 

1/2 கிலோ அளவு நாட்டு சர்க்கரை 

இவை அனைத்தையும் கலந்து  மூன்று நாட்கள் வைத்து விட வேண்டும். மூன்று நாட்களும் தினமும் கலந்து விட வேண்டும்

💥 நான்காவது நாள்...

குளோரின் கலக்காத, இரசாயன தன்மை அற்ற மழை நீர், அருவி நீர், ஆழ்துளை கிணற்று நீர் இவற்றில் எந்த வகை நீர் உங்களுக்கு எளிமையாக கிடைக்கின்றதோ அந்த நீரை ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் 30 லிட்டர் அளவு   எடுத்துக் கொள்ள வேண்டும்.

💥 இந்த நீரில் நாம் மூன்று நாட்களாக தயாரித்து வைத்துள்ள புளிச்சைக் கீரை சாணம் நாட்டு சர்க்கரை கலந்த கலவை இவற்றை அந்த தண்ணீரில் போட்டு நன்கு கலந்து வைத்து விடவும். 

💥 மேலும் இதனுடன் முக்கியமாக நாம் சேர்க்க வேண்டியது இதற்கு முன்பு நாம் தயாரித்த  குரு பஞ்சகவ்யத்தை எந்த நிலத்திற்கு பயன்படுத்தினோமோ அந்த நிலத்தின் மண்ணை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அந்த கலவையுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.*

மேலும்  குரு பஞ்சகவ்யத்தை 3 -  லிட்டர் அளவு எடுத்து  புதிதாக தயாரித்துக் கொண்டிருக்கும்  குரு பஞ்சகவ்வியத்துடன் கலந்து விடவும். அவ்வளவுதான். 

💥 இந்த தூய நீர் குரு பஞ்சகவ்ய கலவையை குறைந்தபட்சம் ஒரு வாரம் அதாவது ஏழு நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வலது புறமாக 60 முறை நன்கு கலக்கி விட வேண்டும்.

💥 இந்த குரு பஞ்சகவ்யம் தயாரிக்கும் பிளாஸ்டிக் ட்ரம்மின் வாய்ப்  பகுதியை ஒரு காட்டன் துணியால் மூடி கட்டி வைக்க வேண்டும். 

💥 இந்தப் குரு பஞ்சகவ்வியத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால்...

💥 எந்தவித அதிகபட்ச பொருட்செலவும் இல்லை. 

💥 குறைந்த செலவில் நிறைந்த லாபமும் மண்ணின் வளமும் காக்கலாம். 

💥 குறுகிய நாட்களில் 30 லிட்டர் அளவு ஆற்றல் மிக்க குரு பஞ்சகவ்யம் கிடைத்துவிடும். 

💥 ஒரு விவசாயி ஒரு முறை மகா குரு பஞ்சகவ்யத்தை தயாரித்தாலே போதும் . மறுமுறை அதை வைத்தே ஆற்றல் வாய்ந்த பஞ்சகவ்யத்தை எளிமையாக உருவாக்க முடியும்.

💥 விவசாயியின்  பணிச் சுமை வெகுவாக குறைக்கப்படுகின்றது. 

💥 வெறும் புளிச்சக்கீரையும் நாட்டுச் சர்க்கரையும் சாணமும் இருந்தாலே போதும் ஏற்கனவே தயாரித்த குரு பஞ்சகவ்யத்தை கொண்டு சுத்தமான இயற்கையான தூய நீரில் பஞ்சகவ்யத்தை தேவையான அளவு ஏழே நாட்களில் தயாரித்துக் கொள்ளலாம்.

உபயோகப்படுத்தும்  முறை:

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

ஒரு லிட்டர் தண்ணீருக்கு வெறும் 50 - மில்லி அளவு கலந்தாலே போதும்....

மிகப்பெரிய பசுமைப் புரட்சியினை கண்ணார காணலாம். 

மண்ணின் வளம் காக்க இயற்கையான வழியில் தயாரிக்கப்பட்ட குரு பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி பெரும் வாழ்வு வாழ மனதார வாழ்த்துகின்றேன். 

நன்றி வணக்கம். 

உங்கள் சித்த மருத்துவர் 

ச. ஜகத்குரு

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

Comments

Popular posts from this blog

சீரடி சாய்நாதர் அருளால் உணர்த்தப்பட்ட எளிய சிவபுராண விளக்கம்!

🕉️ இறைவனை ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவும் ஒரு இறை அனுபவப் பதிவு 🕉️

🕉️ சிவபுராணத்தின் வாழ்க, வெல்க, போற்றி குறித்து குரு அருளால் எளிய விளக்கம்!